பூதப்பாண்டி – டிசம்பர்-20 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள தடிகாரங் கோணம் பகுதியில் தமிழ்நாடு அரசுமேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் சுற்றுப்பகுதி அனைத்து இடங்களும் மலையோர பகுதிகள் என்பதால் பலவிதமான காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படும் போது சோதனை செய்வதற்கு (சி.பி.சி) கம்பி நீட் பிளட் கவுன்டிங்கருவி கடந்த 25 நாட்களுக்கு முன்னர் தடிக்காரன் கோணம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி கருவியை மாவட்ட சுகாதார அதிகாரி (டி.டி. ஹெல்த்) பாலசுப்பிரமணியன் உத்தரவு படி நேற்று முன்தினம் மேல்புறம் ஒன்றியம் இடைக்கோடு சுகாதார நிலையத்திற்கு மாற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இத்தகவல் தெரிந்த தடிகாரன் கோணம் ஊராட்சி தலைவர் பிராங்கிளின் நேற்று 19/ 12 /2024 ஆம் தேதி மாலை சுமார் 7.00 மணி முதல் சுகாதார நிலையத்தின் முன்பு அமர்ந்து மேற்படி கருவியை இடைக்கோடு சுகாதார நிலையத்தில் இருந்து கொண்டு வந்து தடிகாரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்கும்படி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவருடன் அப்பகுதியை சேர்ந்த 10 பேர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததோடு கஞ்சி காய்ச்சும் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
இத் தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த குலசேகரம் காவல் ஆய்வாளர் மீனா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் மாவட்ட சுகாதார அதிகாரி பாலசுப்பிரமணியன் இடைகோடு சுகாதார நிலையத்தில் இருந்து இரவு9.00 மணிக்கு கருவியை தடிக்காரன் கோணம் சுகாதார நிலையத்தில் அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து போராட்டம் இரவு 9.30மணிக்கு போராட்டம் கைவிடபட் டது இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.