அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பான விவகாரம் குறித்து பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அதானி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்தும் அதானியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்தும் அறிக்கை மூலம் கேள்வி கேட்டு இருந்தார் இந்த அறிக்கை குறித்து தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மருத்துவர். ராமதாசை கேழியாக பேசியுள்ளார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்தும் தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர்கள் அய்யம்பெருமாள் பிள்ளை, திருமலைக்குமாரசாமி யாதவ், மாவட்ட தலைவர் குலாம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சங்கரநாராயணன், தலைவர் கிருஷ்ணன் தென்காசி சட்டமன்ற தொகுதி தலைவர் சுசிசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பேமஸ் அப்தூல் மஜித் ,வாசு ஒன்றிய செயலாளர் கணேச பாண்டியன், மாவட்ட சிறுவாான்மை பிரிவு தலைவர் கெய்சர் அலி, தென்காசி நகர செயலாளர் சங்கர நாராயணன்,
ஒன்றிய செயலாளர்கள் சண்முகசுந்தரம், கருப்பசாமி, செங்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் சீவலநல்லூர் இசக்கி , அச்சன்புதூர் பேரூர் செயலாளர் பக்கீர் மைதீன் ,செங்கோட்டை ஒன்றிய செயலாளர் சாமுவேல், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் சிவன் ராஜ் ,முதலியார் பட்டி கிளை செயலாளர் மாரியப்பன் ,தென்காசி மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருமலை குமார் ,வி கே புதூர் பண்டாரம்,மாசாணம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோரை தென்காசி காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.