அருமனை, ஜன- 6
அருமனை அருகே மஞ்சாலுமூடு – மாலைக்கோடு சாலையில் உள்ள சிறக்கரை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் மது பார் அமைய உள்ளதாக தகவல் பரவியது. மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
.இந்த நிலையில் இன்று 5-ம் தேதி காலை சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் கேட்டை திறந்து உள்பகுதியில் பார் அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது மக்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் அங்கு திரண்டு பின்னர் கட்டிடத்தின் எதிரில் பந்தல் அமைத்து அமர்ந்து பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த அருமனை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், ஓட்டல் நடத்த பணிகள் நடந்து வருவதாக கூறினார்கள். போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.