திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் செம்பட்டியில் உள்ள பழைய யூனியன் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.இவ்விழாவிற்கு பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளரும், இல்லம் தேடிக் கல்வி தென்மண்டல ஒருங்கிணைப்பாளரும், வாசிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமாகிய மோசஸ் தலைமை தாங்கினார்.
இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அ.குருபிரசாத் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் ஹெலன் தீபா விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் இலக்கியக் களம் தலைவர் பேராசிரியர் முனைவர் ஆர்.மனோகரன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டி வாழ்த்தி பேசினார்.இவ்விழாவில் ஆத்தூர் ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் திண்டுக்கல் நகர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி சாணார்பட்டி ஒன்றிய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மாறவர்மன் யோகசிம்மன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள். இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியின் முடிவில் மஞ்சுளாதேவி அனைவருக்கும் நன்றி கூறினார்.