நாகர்கோவில் – நவ- 03,
கன்னியாகுமரி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஆயுர்வேத மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போலீசார் குறிப்பிட்ட மசாஜ் சென்டருக்கு அதிரடியாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர்.
அங்கிருந்த 2 பெண்களை போலீசார் மீட்டனர். அவர்களை பாலியல் தொழிலில் ஈடு படுத்தியதாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்த வைசாகன் (38), சிவகாசி ஆணை கூட்டம் கேமன் ராஜ் (27) , நெல்லை மேலப்பாளையம் சம்சில் நவாஸ் (39) என தெரியவந்தது.