தேனி.
தேனி மாவட்டம் அருகே உள்ள பெரியகுளம் கள்ளிப்பட்டியில் மாற்றுத்திறனாளி பூங்கொடி ஆவார். உடல் நலக்குறைவால் கால் இழந்த பூங்கொடி தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினை தொடர்பு கொண்டு செயற்கை கால் கோறியுள்ளார். இதன்படி பூங்கொடி அம்மாவிற்கு தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பாக செயற்கை கால் 5 -10 – 2024 மாலை பொருத்தப்பட்டது. இதற்கான முழு செலவையும் தேனீக்கள் மாற்றுத்திறனாளி அமைப்பு ஏற்றுக் கொண்டது. செயற்கைகால் பொருத்தியவுடன் பூங்கொடி அம்மா கூறியதாவது.எனது வாழ்க்கை அவ்வளவுதான் இனி நான் நடக்க முடியாது என மன சுணக்கம் கொண்டவருக்கு செயற்கை கால் பொருத்தி நடக்க வைத்து அழகு பார்த்த தேனீக்கள் அறக்கட்டளை அமைப்பிற்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என மனமுருக கூறினார். தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு உதவி வேண்டுமென்றால் சொப்பனத்தில் வரும் கனவு போல் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் . இந்த மாற்றுத்திறனாளி அமைப்பு மென்மேலும் உச்ச கட்டத்தை அடைந்து மேலும் இதுபோல் நலிவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்நிகழ்வில் தேனீக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், அழகேசன், ரஞ்சித் குமார், ராம் செந்தில் போட்டோ பாண்டி,ஆகியோர் கலந்து கொண்டனர்.