திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திட்ட இயக்குனர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு
திண்டுக்கல் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி மற்றும் துறை அலுவலர்கள், செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா, 15வது மத்திய நிதி ஆணையம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சித் திட்டப்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிள்ளையார்நத்தம் ஊராட்சி, பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் வளர்ப்பு திட்டம், 15வது மத்திய நிதி ஆணையம் நிதி ரூ.7.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, குல்லலக்குண்டு ஊராட்சி, சிங்கம்பட்டியில் ரூ.1.41 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிடைமட்ட ஊறவைக்கும் குழி அமைத்தல் பணிகள், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் தலா ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகள், ஊரக குடியிருப்புகள் பழுது பார்க்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், ரூ.5.69 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாகம், மயான பகுதியில் ரூ.9.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை வசதி, தண்ணீர் வசதி போன்ற பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.