மதுரை ஜூலை 25,
மதுரையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல்துறையினர் கூண்டோடு மாற்றம்
மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக சட்டவிரோதமாக மது விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மதுரை மாநகர் பகுதியில் உள்ள காவலர்கள் முறையாக பணியாற்றவில்லை என்று புகார் எழுந்தது. சார்பு ஆய்வாளர், சிறப்பு ஆய்வாளர் பத்து பேர் உட்பட மொத்தம் 16 பேரை கூண்டோடு மாற்றம் செய்த மதுரை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.