நீலகிரி.நவ.22.
ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் தமிழகம் வருவதையொட்டி முன்னேற்பாட்டு பணிகள், பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது . வருகிற 27ஆம் தேதி ஜனாதிபதியவர்கள் விமானம் மூலம் கோவை வந்து அதன் பின்பு ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமிற்கு வந்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன்பின் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு வந்து ஓய்வு எடுக்கிறார். 29ஆம் தேதி ஊட்டி ராஜபவனில் நீலகிரி மாவட்ட பழங்குடி மக்களை சந்திக்கின்றார். 30ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு செல்லும் அவர் திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் செல்கிறார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வருகிற 23ஆம் தேதி முதல் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாட்டு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு தமிழகம் வந்து நீலகிரிக்கு வருவதையொட்டி பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி தமிழகம் வந்து நீலகிரிக்கு வரும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் ராணுவ பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, மேற்பார்வையிடப்பட்டு வருகிறது. ஜனாதிபதி அவர்கள் நீலகிரி மாவட்டம் வருவதையொட்டி நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.