நீலகிரி. நவ.29
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பொது நூலகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் மாணவர்களின் நூலக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த கோத்தகிரி நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சமூக ஆர்வலர் நீலகிரி நிர்மலா தனது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பூச்செடி மரநாற்றுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்த பூச்செடி நாற்றுகளை கோத்தகிரி நூலக வளாகத்தில் மாணவர்களே நடவு செய்து அடிக்கடி வந்து பராமரித்து பாதுகாப்பவர்களுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இதனால் மாணவர்கள் அடிக்கடி நூலகம் வருவதற்கு வழிவகுப்பதோடு மாணவர்களின் வாசிப்பு பழக்கமும் மேம்படும் என நிர்மலா தெரிவித்தார். இந்நிகழ்வில் நூலக பணியாளர்கள், நூலக வாசகர் வட்டத்தினர், பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நீலகிரி இயற்கை வளத்தை பாதுகாக்க பொது மக்கள், மாணவர்கள், அரசு பணியாளர்கள், பொதுநல அமைப்பினர் ஒவ்வொருவரும் ஒரு மரமாவது நடவு செய்து நீலகிரியை பாதுகாக்க வேண்டும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. தனது பிறந்தநாளில் மர நாற்றுகள், பூச்செடிகள் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்திய சமூக ஆர்வலர் நிர்மலாவை பலரும் வாழ்த்தி பாராட்டி சென்றனர்.