நீலகிரி. ஏப்ரல். 12
மலை மாவட்டமான நீலகிரியில் மலை காய்கறி பயிர்களில் கேரட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் பல நேர ஏக்கர் பரப்பில் கேரட் பயிர் செய்யப்பட்டுள்து. மற்ற மலை பயிர்களான மலை பூண்டு கொடி பீன்ஸ் போன்றவை நல்ல விலைக்கு விறபனையான நிலையில் தறபோது கடுமையான விலை வீழ்ச்சியை மலைகாயகறி விவசாயிகள் சந்தித்துள்ளனர். மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் கேரட் அதிகமாக பயிரிடப்படுகிறது மிதமான காலநிலை கொண்ட கோத்தகிரி பகுதியில் கடந்த மாதம் வரை அதிகமான கேரட் பயிர் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதமாக மற்ற காய்கறிகளை விட கேரட் விலை மண்டிகளில் ரூ. 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு பின்னர் 50 ரூபாய் வரை விற்பனையானது. அதிகமான கேரட் உறபத்தியால் தினமும் ஆயிரம் டன் வரை மேட்டுபாளையம் மண்டிக்கு இறக்குமதி செய்யபடுகிறது. இதனால் தொடர்ந்து விலை வீழ்ச்சியை கேரட் விவசாயிகள் சந்தித்து வருகின்றனர் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட கேரட் வெளி மாநிலங்கள் உட்பட பாம்பே, கல்கத்தா வரை ஏற்றுமதி செய்யப்பட்டது.
நிலையான விலை தொடர்ந்து கிடைக்கும் என்ற நோக்கில் விவசாயிகள் அதிகமாக கேரட் பயிரிட்டு தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநில கேரட் வரத்து மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிக்கு அதிகமாக வருவதால் விலை உச்சத்தில் இருந்த கேரட் திடீரென ரூ.20 முதல் ரூ. 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கேரட் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கேரட் அதிகமாக விளைச்சல் ஏற்பட்டதால் கேரட் உற்பத்தி செய்யும் செலவு, தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம், ஏற்றுமதி, வண்டி வாடகை என உற்பத்தி செலவு கூட மிஞ்சவில்லை என கோத்தகிரி கேரட் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.மலை காய்கறி விவசாயிகள் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் பள்ளி கல்லூரி படிக்கும் தனது பிள்ளைகளை படிக்க வைக்க, குடும்ப செலவினங்களை சமாளிக்க, வங்கி கடனுதவிகளை கட்ட முடியாத சூழல் உருவாகியிருக்கும் நிலையில் அரசு மலை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய கடன் தளர்வுகளையும் உதவிகளையும் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கேரட் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கவலை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics