திண்டுக்கல் ஜூலை:03
திண்டுக்கல் மறைமாவட்டம், அனுமந்தராயன்கோட்டை
மறைவட்டம், அசிசிநகர் பங்கு பொன்னிமாந்துரை புதுப்பட்டியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அசிசி நகர் பங்கின் பங்கத்தத்தை அருள்பணி எ. டேவிட் செபஸ்டின், தமிழ்நாடு கத்தோலிக்க கிறிஸ்தவ சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் எ.ஆரோக்கியசாமி, தலைமை ஒருங்கிணைப்பாளர் அமலதாஸ் , தமிழ்நாடு கிறிஸ்தவ வன்னியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.ராஜசேகர் மற்றும் அசிசி நகர் பங்கு புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் பங்கேற்று பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.இதில் சுமார் 14 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.