பூதப்பாண்டி – நவ – 16-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியினுள்ள குழந்தைகள் மையத்தில் தோவாளை வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பாக 6 – மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டசத்தை உறுதி படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு அறிவித்துள்ள ரூபாய் இரண்டாயிரம் மதிப்பில் ஊட்டசத்து அடங்கிய பரிசு பெட்டகத்தை பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் வழங்கினார் உடன் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பச்சையம்மாள், பேரூராட்சி துணை தலைவர் அணில்குமார், கவுன்சிலர் யூனிஸ் பாபு, மையஅமைப்பாளர் கீதா, செவிலியர் சசிகலா மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டார்கள்