தஞ்சாவூர் ஜன 23.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திருப்பனந்தாள் ஒன்றில் திருவாய்பாடி ஊராட்சியில் உள்ள இருளர் தெருவில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், மேல வெளி ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
அதைத்தொடர்ந்து கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் ரூபாய்
21.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கிளிமங்கலம் சாலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிக்கல் நாயக்கன் பேட்டை ஊராட்சி ஆதிதிராவிட நல அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், கல்வி தரம் குறித்தும், கழிவறை சமையல் கூடம் போன்ற அடிப்படை வசதிகளின் செயல் பாடுகள் குறித்தும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்
பின்னர் திருப்பனந்தாள் ஒன்றியம் காட்ட நகரம் ஊராட்சி யில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்ல பணி களையும் , மணிக்குடி ஊராட்சியில் வடிகால் பணிகளையும், வஞ்சனூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியி ல் அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது திருவிடைமருதூர் தாசில்தார் பாக்கியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதி, அருளானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.