தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சி தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலிருந்தும் கல்லூரி முடித்த ஆண்கள், பெண்கள் என 3,000-க்கும் மேற்பட்டோர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது தகுதியான வேலைக்கு பதிவு செய்தனர். இதில் 800 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணிக்கன சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் முரளிதரன், தொன் போஸ்கோ கல்லூரியின் செயலாளர் ராபர்ட், ரமேஷ்பாபு மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics