சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்.
சிவகங்கை:ஏப்:09
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற 10.04.2025 அன்று அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, மேற்கண்ட தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், ஹோட்டல்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் அனைத்தும், வருகின்ற மகாவீர் ஜெயந்தி (10.04.2025) அன்று முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்
தெரிவித்துள்ளார்.