நாகர்கோவில், ஜூன் – 30,
பூதப்பாண்டி அருகே உள்ள கரும்பாறை தனியார் ஸ்டேடில் திருவனந்தபுரம் காரக்கோணம் பகுதியைச் சார்ந்த திவாகரன் 65, என்பவர் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார், இவர் விடுமுறைக்கு வீட்டிற்கு செல்லும் போதெல்லாம், கடுமையாக மது அருந்திவிட்டு மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அடிக்கடி தகராறு செய்வதாக தெரிகிறது, இந்த நிலையில் வீட்டில் சண்டை போட்டுவிட்டு மீண்டும் எஸ்டேட்டில் பணியில் சேர்ந்துள்ளார், தொடர்ந்து மனமுடைந்த நிலையில் காணப்பட்டிருக்கிறார், இந்த நிலையில் தான் தங்கியிருந்த அறையில் ஜன்னல் கம்பியில் தனக்கு தானே தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார், அவர் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வரவே இது குறித்து அவர்கள் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர், இதன் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.