தேனி அக் 07
தேனி மாவட்டம் வீரபாண்டி போடேந்திரபுரம் விளக்கு அருகே தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் இருசக்கர வாகனம் பேருந்துக்குள் நுழைந்து உருக்குலைந்தது. திடீரென பேருந்து முழுவதுமாக தீ பற்றி மலமளவென எரிந்தது இதனைக் கண்ட பயணிகளும் அக்கம்பக்கத்தினரும் அலறியடித்து ஓடினர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தீ பற்றி எரிந்த நிலையை கண்ட மக்கள் ஒருவர் கூட அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பதை மனம் வருத்தம் அளிக்கிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கவே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் விபத்து நடந்த அடுத்த நொடியே அப்பகுதியில் இருந்த மக்கள் நினைத்திருந்தால் விபத்தில் சிக்கிய நபரை அரை தீக்காயங்களுடன் மீட்டு இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது ஒரு புறம் இருக்க அங்கு இருந்த ஒரு சிலர் பேருந்துக்குள் நுழைந்து கால் மட்டுமே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தன் நிலை அறியாமல் வீடியோ எடுப்பதிலேயே கவனம் செலுத்தி உள்ளனர். வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடுத்த நொடியை பரப்பி நான் தான் முதல் இந்த விபத்தை அனுப்பினேன் என்று பெயர் வாங்குவதற்காக இதுபோன்ற செயல்களை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் உடலை கண்ட அந்த நபர்கள் கை காலையாவது பிடித்து இழுத்து காப்பாற்றி இருந்தால் வெறும் உடலையாவது அவர்களது குடும்பத்தார்கள் கைப்பற்றி ஒப்படைத்து இருக்கலாம் இவ்வுலகில் கடவுள் படைத்த அடையாளம் தெரியாமல் கருகிய நிலையில் கிடக்கும் உடலை கண்ட சமூக நலப் பற்றாளர்கள் ஐயோ பாவம் என முகம் சுணங்கி சென்றனர். எனவே தற்பொழுது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உரிய நேரத்தில் சேர்த்தால் தக்க சன்மானம் பாராட்டுக்கள் வழங்கப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் மீது வழக்கு சம்பந்தமாக அலைக்கழிப்பு தனம் காவல்துறையினர் செய்ய மாட்டார்கள் எனவும் கூறியிருந்தது ஊரறிந்த உண்மை. எனவே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களே இது போன்ற விபத்து நடந்து கொண்டிருக்கும் பொழுது அருகில் வீடியோக்களை எடுக்கும் நபர்களுக்கு ஒரு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதே சமூக நலப் பற்றாளர்களின் கேள்வியாக உள்ளது. இந்த விபத்து சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.