மதுரை ஏப் 23
மதுரை மாநகரில் கஞ்சா கடத்திய வழக்கில் 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் 30.7.2017 அன்று கஞ்சா கடத்தி வருவதாக மதுரை மாநகர காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை செய்து வந்த போது செல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தத்தனேரி மெயின் ரோடு
இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே உள்ள வாகன எடை மேடை வழியாக வந்த TN 48 M 5577 என்ற காரை சோதனை செய்த போது காரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான சுமார் 225 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கைப்பற்றி அதை கடத்தி வந்த மதுரை திருவாதவூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 27/2017 (HS.No.07/2017) த/பெ.அய்யம் பிள்ளை என்பவரை பிடித்து கைது செய்து செல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்ததில் இவ்வழக்கில் தொடர்புடையதாக தெரிய வந்தது.
அந்த வகையில் குற்றவாளிகளான அய்யம் பிள்ளை வயது 60/2025, த/பெ. பெரியகருப்பன் என்ற பிச்சைபிள்ளை மற்றும் விஜயகுமார் வயது 25/2017
த/பெ.பெரியகருப்பன் பிச்சைபிள்ளை மற்றும் நாகனாகுளம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் சையது இப்ராஹிம் வயது 36/2017 ஆகியோரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கின் சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 21.04.2025 சாட்சிகள் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி. ஹரிஹர குமார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 225 கிலோ கஞ்சா கடத்திய குற்றவாளி கார்த்திக் த/பெ. அய்யம் பிள்ளை என்பவர் மீதான குற்றச்சாட்டு சாட்சிகள் விசாரணையில் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபணம் ஆவதால் சம்பந்தப்பட்டவர் மீது குற்றவாளி என தீர்ப்பளித்து 10 வருடங்கள் கடும் காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட செல்லூர் காவல் துறையினரை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.