தருமபுரி மாவட்டம், அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பயன்பெற்ற 142 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பில் அரசு நலதிட்ட உதவிகள் மற்றும் 391 பயனாளிகளுக்கு ரூ.51.89 இலட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 533 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் முன்னிலையில் வழங்கினார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி. கே. மணி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, நகர்மன்றத் தலைவர் மா.இலட்சுமி, ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா முருகன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.
ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics