கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளி
தலைமை ஆசிரியர் வீரமணிக்கு சிறந்த நல்லாசிரியருக்கான ராஜ கலைஞன் விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கி பாராட்டினார்.
மாவட்ட அளவில் சிறந்த நல் ஆசிரியருக்கான திருச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழக பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு ஆண்டு தோறும் ராஜகலைஞன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் சிறப்பாக கல்வி பணியாற்றி வரும் நல்லாசிரியருக்கான ராஜ கலைஞன் விருது கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருச்சியில் தங்க பதக்கத்துடன் விருது சான்றிதழ் கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
விருது பெற்ற தலைமை ஆசிரியர் வீரமணிக்கு ஆசிரியர்களும் தன்னார்வலர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர்.