கந்திலி: டிச:18, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 46 பயனாளிகளுக்கு இலவச வீடு மற்றும் பணி ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் திருமதி. திருமதி திருமுருகன் , ஒன்றிய குழு துணை தலைவர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பயனாளிகளுக்கான இலவச பணி ஆணைகளை வழங்கினார்கள்.
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட மட்றப்பள்ளி, குரும்பேரி, லக்கி நாயக்கன் பட்டி, தோக்கியம், சுந்தரம்பள்ளி, பெரிய கண்ணால பட்டி, பேராம்பட்டு, தோரணம்பதி, எலவம்பட்டி, பள்ளத்தூர், நார்சாம்பட்டி உள்ளடக்கிய கிராம பஞ்சாயத்து பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.