நாகர்கோவில் ஜூன் 1
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள பாறைக்கு சுவாமி விவேகானந்தர் கடலில் நீந்தி சென்று அந்தப் பாறையின் மீது அமர்ந்து மூன்று நாள் தவம் இருந்ததார். எனவே அந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவாக கட்டப்பட்ட நினைவு மண்டபம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். இந்நிலையில்
சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (30.05.2024) முதல் தியானம் செய்து வருகிறார்.
30.05.2024-ம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில் விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தை தொடங்கிய நிலையில், 31.05.2024 மாலை வரை தியானத்தை தொடர்கிறார். 48 மணி நேர தியானத்தை மேற்கொள்கிறார். இந்த தியானத்தின்போது திரவ உணவை மட்டுமே பிரதமர் மோடி எடுத்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தியான் நேரத்தில் பிரதமர் மவுன விரதம் இருப்பார் என்றும் தியான அறையை விட்டு வெளியே வரமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் மோடி தியானம் மேற்கொண்டார். அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இமயமலையில் கேதர்நாத் குகையில் தியானம் மேற்கொண்டார்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடியும் நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள்களுக்குத் தொடர்ச்சியாக, 45 மணி நேரம் மோடி தியானம் மேற்கொள்கிறார்.இதற்காக
30-ம் தேதி மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர், விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றவர், அங்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வழிபட்டார்.அதைத் தொடர்ந்து விவேகானந்தரின் முழு உருவச் சிலைக்கு மலர் தூவி வழிபட்டு இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி தனது தியானத்தை தொடங்கினார்.
இரண்டாவது நாளான நேற்று காலை பிரதமர் மோடி காவி உடையில், சூரிய பகவானை தரிசித்து வழிபட்டார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து இன்று (ஜூன் 1ம் தேதி) வரை தியானத்தில் ஈடுபட உள்ளார்.