மதுரை அக்டோபர் 28,
மதுரை மாவட்டம் சமயநல்லூரில்
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து கர்ப்பிணி பெண்களுக்கான கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி UPHC ல் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளரான மருத்துவர் பத்மாவதி BLOCK MEDICAL OFFICER சமயநல்லூர். நிகழ்ச்சியில் முக்கியமாக கற்பனை பெண்கள் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்து எவ்வாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்றும் அவரவர்கள் உடலுக்கு ஏற்றவாறு மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் இது தங்கள் பிரசவத்திற்கு உதவும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. ஜோசப் யோகா பயிற்சியாளர் கர்ப்பிணி பெண்களுக்கு சில உடற்பயிற்சிகளை செய்து பயிற்சி செய்தார். நிகழ்ச்சியின் இறுதியாக விமலா ஸ்டாஃப் நர்ஸ் நன்றியுரை வழங்கினார்.