திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஊணத்தடுப்பு மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர்
மரு.சீனிவாசன் தலைமை ஏற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினார் . நலக் கல்வியாளர் முகமது இஸ்மாயில் திட்ட விளக்க உரை ஆற்றினார். டேமியன் பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் நரேஸ்குமார் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால் பராமரிப்பு பயிற்சி வழங்கினார். இம்முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், மணிகண்டன், விஜயகுமார், பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மருவத்துவமல்லா மேற்பார்வையாளர்ரவிசங்கர் சிறப்பாக
செய்து இருந்தார்.