திருப்பத்தூர்:ஆக்:30, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராஜு தலைமையிலான ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதாகைகள் ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு முடிவுற்றது.
இதில் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் கவுரி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கணேசன், ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.