மயிலாடுதுறை மாவட்டம்,
மயிலாடுதுறையில் . ஆதின மடத்தின் இடங்களை தனியாருக்கு விற்பதை தடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கபட்டது தருமை ஆதினம். இந்த ஆதினத்திற்கு சொந்தமான இடங்களை தற்போதைய 27-வது குரு மகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்கள் தொடர்ந்து தனியாருக்கு விற்று வருவதை தடுக்க கோரியும். குளிச்சார் பகுதியில் ஆதின நிலத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலத்தை தனியார் வீட்டு மனை போட்டு விற்பதை தடுக்க கோரியும் 100 -க்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக கூட்டமாக வந்த பொதுமக்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க மறுப்பு தெரிவித்த காவல் துறைக்கும் பொதுமக்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது