தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள கிராம கமிட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தென்காசிக்கு வருகை தந்தார் அவர் தென்காசி நகரில் மேலமாசி வீதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செல்வப் பெருந்தகை அங்கு மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தென்காசி அருகே உள்ள ஆயிரப் பேரியில் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று அங்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தவுடன் நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது
தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கிராம கமிட்டி துவங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து
தமிழ்நாடு கிராம கமிட்டி வட்டார கமிட்டிகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கிராம கமிட்டிகளை
பார்வையிடுவதற்காக வந்துள்ளேன்.
தென்காசி மாவட்டத்தில் 100% கிராம கமிட்டி அமைக்கப்பட்டது போன்று தமிழகம் முழுவதும் 100% கிராம கமிட்டி அமைக்கப்படும்.
தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து கிராம கமிட்டி அமைக்கப்படுகிறது. 2026 க்குள் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி முழுமையாக வளர்ச்சி பெறும்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றோம். 2026 – தேர்தலிலும் இந்தியா கூட்டணி தொடரும்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
த .வெ.க.வுடன் கூட்டணி என்பது சமூக வலைத்தில் பரவுகிறது. இது உண்மை இல்லை.
நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டதற்கு ஆதாரம் இருந்ததால் உடனடியாக கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டாலும் அதே விசாரனை தான் நடைபெறும் என்று அவர் கூறினார்.பத்திரிக்கையாளர் சந்திப்பில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஃப்ரூட், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு செயலாளர் ராம மோகன், சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், மகிளா காங்கிரஸ் கமிட்டி தென்காசி மாவட்ட தலைவி பூமாதேவி ,நகரப் பொறுப்பாளர் ஈஸ்வரன் ,ஆலங்குளம் செல்வராஜ், ஜெய் பாக்யா சட்டநாதன்,கீழப்பாவூர் துணைத் தலைவர் ராஜசேகர் , வட்டார தலைவர்கள் பெருமாள், கதிரவன், குமார் பாண்டியன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்