கன்னியாகுமரி,ஆக.29-
கன்னியாகுமரியில் அல் – ஸதக்கா அறக்கட்டளை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு அறக்கட்டளை துணைத்தலைவர் சலீம் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் சுலைமான், பொருளாளர் அம்ஜத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறந்த சமூக சேவகர் விருது சின்னமுட்டம் ஜெயசிறிலுக்கு வழங்கப்பட்டது.
விருதினை அல் – ஸதக்கா அறக்கட்டளை செயலாளர் கெய்சர்கான் வழங்கினார்.