தென்காசி. டிச.21
சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் P.சட்டநாதன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திவான் பக்கீர் கோரிக்கைக்கு இணங்க தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பரிந்துரையின் பேரில் சுரண்டை நகர் மன்ற முதல் சேர்மன் SP.வள்ளி முருகன் பள்ளிக்கு ஒலிபெருக்கியினை வழங்கினார்.உதவி தலைமை ஆசிரியை லதா பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் K.கதிரவன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கிறிஸ்டோபர் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் கோமதிநாயகம், கருப்பையா, சுஜித்,ராஜமலர், ரேணுகா தேவி, அகிலா, பிரேமா, ஆழ்வார்,முத்துலட்சுமி, முப்புடாதி, சண்முகநாதன் மற்றும் அலுவலக பணியாளர்கள் ராஜகோபாலன், அழகுமாரி விழா ஏற்பாடுகளை செய்தனர். காங்கிரஸ் கட்சியின் SR.பால்துரை தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் K.சுரேஷ் இலவரவசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.