அக். 20
உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி அறிவுரை.
விழிப்புணர்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்தவராஜ் உத்தரவின்படி தீபாவளி பண்டிகையை ஒட்டி இனிப்பு காரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கான
விழிப்புணர்வு கூட்டம்.
உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் திருப்பூரில் நடைபெற்றது. உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி Dr. விஜயலலிதா ம்பிகை தலைமை தாங்கி பேசினார். இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிகாரி விஜய லலிதாம்பிகை கூறியதாவது. உணவு தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம் உணவு தயாரிப்பு பகுதி வெளிச்சமாக இருக்க வேண்டும் தரைத்தளம் சுகாதாரமாக இருக்க வேண்டும் புகை போக்கி கழிவுநீர் செல்லும் பாதையை சரியாக பராமரிக்க வேண்டும் உணவு தயாரிப்புக்கு பொட்டலம்மிடப்பட்ட எண்ணெயை மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
செயற்கை நிறமிகூடாது இனிப்பு கார வகைகளில் இயற்கை வண்ணங்களை சேர்க்க வேண்டும் அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை 100 பி .பி .எம்.என்ற அளவில் சேர்க்கலாம்.
செயற்கை நிறமிகூடாது. சமையல் கலைஞர்கள் தன் சுத்தம் பேண வேண்டும் உணவு தயாரிப்பு பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் பேக்கிங் செய்யப்படும் உணவு பொட்டலங்களின் மீது உணவுப் பொருட்களின் விவரங்கள் அச்சிடப்பட வேண்டும் சில்லரை வகையில் விற்பனை செய்யப்படும் இனிப்பு காரம் போன்ற உணவுப் பொருட்களின் தயாரிப்பு காலாவதி தேதி விவரங்கள் காட்சிப்படுத்த வேண்டும் உணவுப் பொருட்களை அச்சிடப்பட்டதாளில் வைத்து பரி மாறவே தடை செய்யப்பட்ட பாலிதீன் பையில் பார்சல் செய்யவே கூடாது
ரகசியம் காக்கப்படும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது தயாரிப்பு விற்பனை நிலையத்தில் ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொறுப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு புறம்பாக உணவு தயாரித்தால் உணவு விற்பனை செய்தால் உரிமம் பதிவுச் சான்று பெறாமல் உணவு வணிகம் செய்வோர் குறித்து தகவல் தெரிவித்தால் அந்த நபரின் விவரம் ரகசியம் காக்கப்படும்
உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடு உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் குறித்த புகார்களுக்கு
94 440 42 322 என்ற whatsapp எண்ணிலும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அறைஎண . 428 -ல் உள்ள உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி யை 0421-2971190 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.