மார்ச்:3
முதல்வர் அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்க மூன்று பக்க விளக்க கடிதம் கொடுத்துள்ளோம்.
வைகோ அரசியலில் இருந்து ரிட்டையர்டு ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டது அவர் பார்முக்கு எப்போது திரும்புவார் என காத்திருக்கிறேன்.
சீமான் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை. என திருப்பூரில் அண்ணாமலை பேட்டி.
திருப்பூர் வெற்றி அமைப்பின் சார்பில் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகளில் 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது இதனை தொடர்ந்து வனத்துக்குள் திருப்பூர் ஆண்டுவிழா திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரை தனியார் அரங்கில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆண்டு விழாவில் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினரை வாழ்த்தி பேசினார் பின்னர் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார் .
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.
தமிழக முதல்வர் மார்ச் 5ம் தேதி 45 கட்சிகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் பாஜக பங்கேற்காது என விளக்கமாக 3 பக்க கடிதம் அனுப்பி உள்ளோம்.
தகுந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பிரதமர் மோடி எப்போதும் அநியாயம் செய்ய மாட்டார். எந்த அடிப்படையில் தொகுதி ஒதுக்கீடு குறித்து தெரிவிக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளோம். இல்லாத விஷயத்திற்கு எதற்கு அனைத்து கட்சி கூட்டம் மும்மொழி கொள்கை குறித்து மார்ச் 5ம் தேதி சென்னையில் ஒரு கையெழுத்து இயக்கம் துவக்க உள்ளோம். எலக்ட்ரானிக் வெப்சைட் மூலம் இயக்கம் நடத்தப்படும். 1 கோடி கையெழுத்து வாங்கி கொடுக்க வேண்டும் என்பது இலக்கு
தொகுதி குறைப்பு என பிரச்சனையை துவக்கியது முதல்வர். 543 மக்களவை தொகுதியில் 39 தொகுதி தமிழகத்தில் உள்ளது. நாளை தொகுதி உயர்த்தப்பட்டால் விகிதாச்சார அடிப்படையில் தொகுதி உயர தானே வாய்ப்பு உள்ளது. தமிழக மக்களை குழப்பி அடிப்படை பிரச்சனை குறித்து பேச விடாமல் செய்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு எப்படி என விளக்கம் கொடுத்துள்ள நிலையில் திமுக ஆட்சி கலைந்து விடும் என பயப்படுகின்றனர். அனைத்து விளக்கமும் கொடுத்த பின்னர் அனைத்து கட்சி கூட்டம் எதற்கு. தமிழக பிரச்சனைகளை திசை திருப்ப மக்களை ஏமாற்றுகின்றனர்.
முதல்வரின் நேற்றைய நிகழ்வு டாடி மம்மி என புகழ்பாடும் நிகழ்வாக இருக்கிறது. பாஜகவை யார் அதிகம் திட்டுவோம் என்பதே போட்டியாக இருந்தது. 4 ஆண்டு சாதனையை சொல்லாமல் 2021 தேர்தல் பற்றி சொல்லி வருகிறார். இவருக்கு ஆட்சி நடத்துவதை விட குறை சொல்வதில் தான் அக்கறை.
வைகோ அரசியலில் ரிடெயர்ட் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்திய அரசியலில் அநாகரிகமாக பேசுபவர் என்றால் அது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான். அவர்களுக்கு அவர்கள் பாஷையில் பேசினால் தான் புரிகிறது. மக்களுக்கு தெரிய வேண்டும். என்பதால் பேசுகிறேன்.
சத்துணவு கூடத்தில் அழுகிய முட்டை போடும் கீதா ஜீவன் என்னை பற்றி பேசுவது வியப்பாக உள்ளது.
திமுக குறித்து விமர்சித்து பேசிய வைகோ அய்யா இன்று இப்படி பேசி உள்ளார். திமுக முதல்வர் புகழ் பாடும் ஹோட்டல் குமாஸ்தாவாக மாறியது வருந்தத்தக்கது.
சீமான் வீட்டில் சம்மன் ஒட்டி நடந்து கொண்ட விதம் சரியில்லை.
தமிழக காவல் துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்களோ என ஐயம் எழுகிறது. சம்மன் கொடுத்து போகவில்லை என்றால் நீதிமன்றம் கைது செய்ய ஆணை பிறப்பிக்கும். கேட்டில் ஒட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது. தேடப்படும் குற்றவாளி வீட்டில் தான் சம்மன் ஒட்டுவார்கள். அடுத்த நாள் சீமான் ஆஜராகவில்லை என்றால் தான் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை நடந்து கொண்ட விதம் ஏற்புடையதாக இல்லை. ஆதார பூர்வமாக சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் அவரும் சாமானிய மனிதர் தான்.
காவல் துறை ஒளிவு மறைவின்றி நடந்தால் எல்லோருக்கும் காவல் துறை மீது நம்பிக்கை ஏற்படும்.
தமிழக நிதி 5 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. செய்தியாளர்களிடம் மட்டுமே பேசுகிறார். எந்த நிதி குறைக்கப்பட்டது என கூறினால் விளக்கம் தரப்படும்.
தென் அமெரிக்காவில் இருந்து வரும் மக்காச்சோளம் மத்திய பிரதேச மக்காசோளத்தை விட விலை குறைவு. இதனால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். என்பதால் தான் வரி விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டால் அதற்கும் தீர்வு காணப்படும்.
திருமாவளவன் பள்ளிக்கு மட்டும் தான் பாதுகாப்பு. இரவோடு இரவாக பொறுப்பாளர்களை மாற்றி விட்டார். திருமாவளவன் கூறும் கம்பி கட்டும் கதையை மக்கள் எத்தனை நாட்கள் ஏற்பார்கள். தமிழ் மொழிக்கு 10 ஆண்டுகளாக மோடி பெருமை பெற்று கொடுத்துள்ளார். கலாச்சாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை எங்கும் மேற்கொள்ளப்பட வில்லை.
இன்றே சொன்னால் சோறு போட மாட்டார்களே. பிரஷாந்த் கிஷோர் ஜெயிக்கும் என சொன்ன கட்சி ஜெயிக்காது. அவர் கட்சியே 3 ம் இடம் தான் பெற்றது . அவர் சொல்வதை நான் சாத்தியக்கூறாக பார்க்கவில்லை.
3 வயது குழந்தை மீது பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து கூறிய ஆட்சியர் பணியிட மாறுதல் செய்தது பாராட்டத்தக்கது.
விரிசல் இருந்தால் தான் மண் விழும். முதல்வர் பாதியை ஒப்புக் கொண்டார். இன்னும் 8 மாதத்தில் கூட்டணி இன்றி தனியே இருப்பார். திருமாவளவன் தோழமை சுட்டுதலில் இருக்கிறார். வைகோ அண்ணன் பார்முக்கு காத்திருக்கிறேன் அவர் யாரை பாராட்டினாலும் ஒரு வருடம் கழித்து திட்டுவார்.
ஆணவத்தை எப்போது மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுகவினர் குறுநில மன்னர்கள் போல செயல்படுகின்றனர்.
டெக்ஸ்டைல்ஸ் துறையில் புதிதாக பல பிரச்சனைகள் ஏற்படும் அவற்றை சரிசெய்ய தொடர்ந்து முயன்று வருகிறோம்.
காவுத்தம் பாளையம் பகுதியில் அகழாய்வு செய்ய 600 நாட்களை கடந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக உள்ளோம். தமிழக அரசு முன்னெடுப்பு செய்யும் பட்சத்தில் மத்திய அரசு உதவி செய்யும்.
கோவம் வரத்தான் செய்யும். நெஞ்சில் சுமக்கும் தலைவர் குறித்து பேசினால். உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி ஸ்டாலினுக்கு சேவை செய்ய சொன்னால் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் செய்வார். அவர் குறித்து பேசி நான் தரம் தாழவிரும்பவில்லை. ரவுடி கட்சிக்கு உதாரணம் திமுக.
அப்பா ஆப் இல்லை அப்பத்தா ஆப். அதை வைத்து பணம் வசூல் செய்ய துவக்கி உள்ளனர். சிபிஎஸ்இ பள்ளிக்கு ஒர் ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் பெற வேண்டும் என்பதால் தான் மாநில அரசு அனுமதி விலக்கை மத்திய அரசு வழங்கியது.
என்னோடு மா.சுப்ரமணியம் அண்ணனை என்னோடு வரச்சொல்லுங்கள் நான் கஞ்சா அபின் எது வேண்டுமோ வாங்கி தருகிறேன். பள்ளிக்கூடங்கள் எல்லாம் போதை காடாக மாறி உள்ளது. குழந்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் 100 நாட்களைக் கடந்தும் குற்றவாளிகளை பிடிக்கவில்லை இதுகுறித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு
15ம் தேதிக்கு பிறகு ஆளுநரை சந்தித்து சிபிஐ விசாரணை கோர உள்ளோம். வேங்கை வயல் போல சாதாரண நபர்களை பிடித்து வழக்கை முடிக்க நினைக்கிறார்கள் சிபிஐ விசாரணை தான் ஒரே தீர்வு.