மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் மயிலாடுதுறை தரங்கம்பாடி குத்தாலம் உள்ளிட்ட தாலுக்காவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வாடகை வாகன ஓட்டிகள் வாகன பதிவு,உரிமம் நீட்டிப்பு உள்ளிட் சேவைகளுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடம் கடந்த ஆறு மாதமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் அருகே உள்ள கும்பகோணம் அல்லது தஞ்சாவூரில் பணிபுரியும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பகுதி நேரமாக அவ்வப்போது மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரிலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இல்லாததால் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகப் பணிகள் முற்றிலுமாக முடங்கியது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக புதிய வாடகை வாகனங்கள் பதிவு செய்வது, வாடகை வாகனங்களுக்கான பர்மிட் வழங்குவது, காலாவதியான பர்மிட்களை புதுப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் வாடகை வாகனங்கள் வாங்கியவர்கள் மற்றும் இயக்குபவர்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.அதே போல் காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்கும் பணியும் தடைபட்டுள்ளதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போக்குவரத்து துறை அலுவலகத்தில் விசாரித்த போது கடந்த ஆறு மாதங்களாகவே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணி காலி இடமாக உள்ளது. பகுதி நேரமாக பணியாற்றியவர்களும் பணி மாறுதல் மற்றும் விடுப்பில் சென்றதால் கடந்த 20 நாட்களாக அனைத்து பணிகளும் முடங்கி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.வாடகை வாகனத்தை பதிவு செய்யவே காலதாமதம் ஆகும் நிலையில் பர்மிட் வழங்க மேலும் தாமதம் அகும் என கவலை தெரிவித்த வாகன ஓட்டிகள் கடனுக்கு வாங்கிய வண்டியை இயக்க முடியாமலும் உரிய நேரத்தில் தவனை தொகை கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே மயிலாடுதுறைக்கு புதிய வட்டார போக்குவரத்து அலுவலரை விரைந்து பணியமர்த்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் பணிகள்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics