மதுரை நவம்பர் 27,
மதுரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி மதுரை பூண்டி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது. மதுரை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான சண்முகசுந்தரம் AO வேளாண்மை துறை விவசாயிகளுக்கு தேவையான கருத்துக்கள் மற்றும் வேளாண்மை துறை வழங்கும் விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார் நிகழ்ச்சியின் இறுதியாக பூண்டி கிராமம் விவசாய தலைவர் சிவசுப்பிரமணி நன்றியுரை வழங்கினார்.