வேலூர்_13
தமிழகம் முழுவதும் சின்னம்மா தலைமையில் அஇஅதிமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது
அதே போன்று வேலூர் மாநகர மாவட்ட சார்பாக அஇஅதிமுக கட்சி வழி நடத்த வேண்டும் என வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சென்னை பகுதிகளிலும் கட்சி ஒன்றிணைய வேண்டும் என வேலூர் மாநகர மாவட்ட தொண்டர்கள் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளனர் வேலூர் காட்பாடி சத்துவாச்சாரி பாகாயம் தொரப்பாடி சேம்பாக்கம் கொண வட்டம் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது
அந்த போஸ்டரில் பொறுத்தது போதும் தாயே, ஆணையிடுங்கள் பிளவு பட்டு பிரிந்து கிடக்கும் அஇஅதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களை மீண்டும் ஒன்றிணைக்க தலைமை அலுவலகத்திற்கு வாருங்கள் உங்களை நாடி நாங்கள் வருகிறோம் எனவும்
தமிழக மக்களை காத்திட மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைத்திட வாருங்கள் என டக்கர் (எ) எஸ் கே ஜானகிராமன், அ இ அ தி மு க வேலூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர். பி எம் நரசிம்மன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் தலைமை அரசு கொறடா முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி. எல் கே எம் வாசு,வேலூர் முன்னாள் மாவட்ட கழக செயலாளர். மற்றும் தொண்டர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால். திமுக கட்சியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.