முதுகுளத்தூர் ஜன.16
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்வநாயகபுரம் ஊராட்சியை முதுகுளத்தூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் ஊராட்சியில் செல்வநாயகபுரம் மற்றும் தூரி செயல்பட்டு வந்தது. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வநாயகபுரம் ஊராட்சியை முதுகுளத்தூர் பேரூராட்சியுடன் இணைத்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. கிராம மக்கள் சில மாதங்களாக செல்வநாயகபுரம் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தனர் அப்போது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது கிராம மக்கள் இணைபதை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் தமிழக
அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட தூண்டாதே என்ற வாசகத்துடன் தேர்தலை புறக்கணிப்போம் என்று நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.