கமுதி ஜீன்-17
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு.
கமுதி அருகே பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கே.டி இராமகிருஷ்ணன் அவர்கள் இவர் தீவிர அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா அவர்களின் ஆதரவாளராக இருந்து வருகின்றார்.அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி,சாயல்குடி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கும் வகையில் ” ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் அனைத்து பகுதியிலும் ஒட்டி உள்ளார். இதுகுறித்து பசும்பொன் ஊராட்சி மன்றத் தலைவரும் சசிகலா அவர்களின் ஆதரவாளர் கே.டி. ராமகிருஷ்ணன் அவர்களிடம் கேட்ட பொழுது அதிமுக என்ற ஒருமாபெரும் இயக்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியில் மிகப்பெரிய அளவில் பிரிந்து உள்ளது, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலும்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் டிடிவி தினகரன் தலைமையில், அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி தலைமையில் ஒரு அணி, இவர்களை அனைவரையும் சாராத எம்ஜிஆர், ஜெயலலிதா, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் தொண்டர்கள் இப்படி பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடைக்கும் அதிமுகவை ஒன்றிணைத்தால் மட்டுமே வருகின்ற உள்ளாட்சி தேர்தல்,சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும், இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று இருக்கக்கூடிய அதிமுக கட்சி தொடர்ந்து போட்டியிட்ட பத்து தேர்தலிலும் தோல்வியை சந்தித்திருக்கின்றது.தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதுபோல நடைபெறயுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடவில்லை என்ற அறிவிப்பு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் இதுபோன்ற அறிவிப்பு எங்களைப் போன்ற அதிமுக விசுவாச தொண்டர்களையும் சோர்வடைய செய்துள்ளது. ஆகையினால் இந்த கட்சியை வழிநடத்த ஒரு தகுதியான தலைமை என்றால் அனைவராலும் நன்கு அறியப்பட்ட அதிமுகவின் பொதுச் செயலாளர் இருக்கும் சின்னம்மா சசிகலா அவர்களால் மட்டும்தான் இயக்கத்தை மிகப்பெரிய அளவில் வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களை போன்ற தொண்டர்களுக்கு இருக்கிறது. ஆகையினால் தான் பல்வேறு தலைமையில் இயங்கும் நபர்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும், கட்சிக்காக விட்டுக் கொடுத்து கழகத்தை ஒன்றிணைத்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி அடைந்தும் சரித்திரம் படைக்க சின்னம்மா சசிகலா அவர்கள் தலைமையில் ” ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்” என்ற வாசகத்தின் அடிப்படையில் நான் அனைவரையும் அழைத்து உள்ளேன் என கூறியிருக்கின்றார். இந்த போஸ்டரால் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் மத்தியிலும்,அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது என பொதுமக்களும், அதிமுகவின் தீவிர தொண்டர்களும் கூறி வருகின்றார்கள்.