நாகர்கோவில் ஜூன் 22
10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பாக யோகா நிகழ்ச்சி சுயத்திற்கும் சமூகத்திற்கும் என்ற கருப்பொருளில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் உள்ள சூரிய உதய முனையம் மற்றும் சிதறால் சமணர் மலைக்கோவிலில் வைத்து நேற்று காலை 07.00 மணி முதல் 0800 மணி வரை நடைபெற்றது.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் உள்ள சூரிய உதய முனையத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்வில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் உதவி அஞ்சலக கண்காணிப்பாளர்கள் பரமேஸ்வரன், டென்னிஸ் தாசன், மூத்த தலைமை அஞ்சலக அதிகாரி சுரேஷ், வாழ்க வளமுடன் யோகா மாஸ்டர் ஸ்ரீதேவி ஆகியோருடன் 200 க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு உடலும் உள்ளமும் உறுதி பெற யோகா பயிற்சி மேற்கொண்டு பயன்பெற்றனர். சிதறால் சமணர் மலைக்கோவிலில் வைத்து நடைபெற்ற யோகா பயிற்சியில் மனோஜ், தக்கலை உப கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர், கண்மணி, குழித்துறை உப கோட்ட அஞ்சல் ஆய்வாளர் மற்றும் 50க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியர்களுடன் இணைந்து இந்திய தொல்லியல் துறையை சேர்ந்த அலுவலர்கள் சுமார் 15 பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.