நாகர்கோவில் ஜூலை 19
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் கிராம சபை கூட்டமானது அஞ்சல் துறை சார்பில் ஹிந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கப்பியறையில் வைத்து நேற்று நடைபெற்றது. விழாவில் சிவகுமார், வரவேற்புரை வழங்கினார். ஹிந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் பாலாசிங் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். தக்கலை உப கோட்ட உதவி கண்காணிப்பாளர் மனோஜ் முன்னிலை வகித்தார். ரதீஷ் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் சிறுசேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் இணைதல், மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் வழியாக பெறுவதற்கு கணக்குகள் தொடங்குதல், பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடங்குதல் அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளை பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரிவித்தல், பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு சேமிப்பு கணக்குகள் தொடங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.