நாகர்கோவில் அக் 5
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் சார்பாக
தபால் தலை சேகரிப்பை பற்றி மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு தபால் தலை கண்காட்சி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடம், நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையம் ஆகிய இடங்களில் அக்டோபர் 8-ம் நடைபெற உள்ளதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தேசிய அஞ்சல் வார விழாவானது இந்திய அஞ்சல் துறையால் இவ்வருடம் அக்டோபர் மாதம் 07 முதல் 11 வரை கொண்டாடப்படுகிறது. இதில் அக்டோபர் 8 ஆம் தேதி தபால் தலை சேகரிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை சிறப்பிக்கும் விதமாகவும் தபால் தலை சேகரிப்பை பற்றி மாணவ மாணவிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சிறப்பு தபால் தலை கண்காட்சி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடம், நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையம் ஆகிய இடங்களில் அக்டோபர் 8 ஆம் தேதி கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தபால் தலை சேகரிப்பாளர்கள் பலரின் அரிய வகை தபால் தலைகள் கண்காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் பள்ளி மாணவர்களுக்கு தபால் தலை சிறப்பு கருத்தரங்கு மற்றும் வினாடி வினா நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாணவ மாணவிகள் பார்வையிட்டு பயன்பெறலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது