பூதப்பாண்டி – செப்டம்பர் – 14-
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த காளிகேசத்தில் சக்தி வாய்ந்த காளிஅம்மன் கோவில் உள்ளது அந்த கோவிலில் வருகின்ற 17 -ம் தேதி செவ்வாய் கிழமை பௌர்ணமி பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது அன்று காலை 7.00 மணிக்கு பக்திஇசையும் 9.00 மணிக்கு ராஜமேளமும்9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்துகாலை 10.00 மணிக்கு உலக நன்மைக்காக பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் லலிதா சகஸ்ரநாம பூஜையும், நன்பகல்12.00 மணிக்கு நாதஸ்வர மேளம்
மதியம் 1.00 மணிக்கு அலங்கார தீபாராதனை மதியம் 1.30 மணிக்கு அன்னதானம் அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்நடைபெற இருக்கின்றது பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
விழா ஏற்ப்பாடுகளை காளிகேசம் அருள்மிகு காளிஅம்மன் கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாககுழு மற்றும் பௌர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினரோடு பக்தர்களும் செய்து வருகின்றனர்.