நாகர்கோவில் செப் 3
கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆண்டுகளாகியும் இந்நாள் வரை சீரமைக்கப்படாமல் மிகவும் ஆபத்தான நிலையில் சுவர் உள்ளது.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் மீதியிருக்கும் சுவரும் விரிசல் விழுந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. பள்ளியின் சார்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை இதற்க்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியரிடமும், பால்வளத்துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி துறை சார்ந்த அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு பயனும் இல்லை பள்ளியின் மாணவ, மாணவிகள் வேறு இடத்திற்க்கு மாற்றப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது, தற்போது பெய்து வரும் மழையினால் மாணவர்கள் அங்கும், இங்கும் அலக்கழிக்கப்படுகிறார்கள், இந்த விசயத்தில் அதிகாரிகள் மிகவும் அலச்சியமாக இருந்து வருகிறார்கள். பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இடிந்து போய் காணப்படும் பள்ளியின் சுற்று சுவரை கட்டி இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை பாதுகாத்திட வேண்டும். மேலும் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து வரும் துரை சார்ந்த அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும், கல்வி துறையும் நடவடிக்கை எடுக்குமா? என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.