ஆரல்வாய்மொழி ஜன 1
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழுக்கு அமிழ்தென்று பெயருண்டு
தரணி எங்கும் நிறைந்திருக்கும் சிறப்புமுண்டு.
கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு என கவி உரைத்த முண்டாசுக் கவிஞர்
மகாகவி பாரதி பிறந்த பைந்தமிழ் மண்ணும் நம் மண்ணே
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில்
மக்கள் மனதில் மகிழ்ச்சி ஆட்சி செலுத்தட்டும்
துன்பங்கள் விலகி போகட்டும்
இல்லாமை இருண்டு போகட்டும் இனியவை என்றும் நடக்கட்டும்
தமிழ் கூறும் நல்லுலகம் தழைக்கட்டும்
கொடுத்து மகிழும் நிலை வேண்டும்
பரந்த இதயம் துணை வேண்டும்
சொல்லிலும் செயலிலும் தூய்மை வேண்டும்
சொன்னதை செய்வதில் துணிவு வேண்டும்
பிறர் உயர நினைக்கும் குணம் வேண்டும்
அனைவரின் வாழ்வும் செழிக்க வேண்டும்.
அனைவருக்கும் எனது இனிய உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.