நாகர்கோவில் – ஜன- 16,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஊர்க்காவல் படையினர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை தினமானது குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் , விளையாட்டுப் போட்டிகள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பொங்கல் திருநாளில் பொங்கலிட்டு கொண்டாடினர். அந்த வகையில் நாகர்கோவில் ஊர்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொங்கல் பானைக்கு நெருப்பு மூட்டி பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விழாவில் திருநெல்வேலி சரகம் ஏசிஜி பிரகாஷ்குமார், கன்னியாகுமரி ஏரியா கமாண்டர் டாக்டர். பிளாடிலின் , உதவி ஏரியா கமாண்டர் மைதிலி சுந்தரம் மற்றும்
ஊர்க்காவல் படை ஆண், பெண் காவலர்கள் மற்றும் காவல் துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்கணிப்பாளர் மருத்துவர் . ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.