அரியலூர்,ஜன;10
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று சென்னையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். அதனைதொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் நேற்று முதல் 12 ஆம் தேதிவரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபட உள்ளது.
இதனையொட்டி வாரணவாசி கிராம நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி நேற்று வழங்கினார்.
இதில் ஒருகிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார்.
இதேபோல் செந்துறையில் உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில் வட்டாட்சியர் வேலுமணி தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கி பொது மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறினார். இதேபோன்று அனைத்து கிராம நியாய விலைக் கடைகளில் ஊழியர்கள் வழங்கினர், அதன்படி பெரியாக்குறிச்சி, நல்லாம்பாளையம், பொன்பரப்பி, மருவத்தூர், உஞ்சினி, சிறுகடம்பூர், இரும்புலிக்குறிச்சி, பரணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்