தூத்துக்குடியில் என்.சி.சி சார்பில் பாலிதீன் ஒழிப்பு பேரணி :-
தூத்துக்குடியில் தேசிய மாணவா் படை சார்பில் நாடுமுழுவதும் பாலிதீன் ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டத்திலும் மாவட்ட என்.சி.சி தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி லெப்டினட் கா்னல் பிரதோஷ் உத்தரவுபடி தூத்துக்குடியில் பாலிதீன் ஒழிப்பு பேரணியானது தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் ஆரம்பித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, காமராஜ் கல்லூரி மற்றும் சேவியா்ஸ் பள்ளி தேசிய மாணவ — மாணவிகள் படை மாணவா்கள் நூறு போ் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட என்.சி.சி தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி லெப்டினட் கா்னல் பிரதோஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேசிய மாணவா்படை அலுவலா்கள் கேப்டன் ஹெலன் புளோரா, லெப்டினட் பட்சி ராஜன், சிலுவை மைக்கேல், சுபேதார்கள் சந்திரசேகா், வரதராஜன்,நாப் சுபேதார் ஜனார்தனன், ரவி, மற்றும் நரேந்தா் ஆகியோர் கலந்து கொண்டனா். இந்த பேரணியின் மூலம் ஒருமுறை பயன் படுத்தப்படும் பாலிதீன் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.