சென்னை,ஆகஸ்ட்- 21.
சென்னை வேப்பேரியில் உள்ள பி.டி.லீ . செங்கல்வராயநாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் 78 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் சி.என்.டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு , பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் பி .கலையரசன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
மேலும் ஜெகநாதன். ஏகாம்பரம். மோகன்ராஜ். முன்னாள் மாவட்ட நீதிபதி சாம்பசிவம், பேராசிரியர் அருளரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பி.டி.லீ செங்கல்வராயர் நாயக்கர் அறங்காவல் உறுப்பினர்கள் வி . சந்திரசேகரன், எஸ். சாத்த பிள்ளை, ஆர். கண்ணையன். எஸ் . ரேணுகா. வெங்கடேஷ். எம் .ராஜேந்திரன். பி . அரிஸ்டாட்டில். எம். என் .விஜயசுந்தரம். ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பள்ளி விடுதி மாணவர்களுக்கு கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிட்டன், கூடைப்பந்து ஆகிய விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சி.என்.டி. முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஏ.பாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
50 முன்னாள் மாணவர்கள் “சீர்” என்ற திட்டத்தின் மூலம் 50 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கான படிப்பு செலவினை ஏற்றுக்கொண்டனர்.
ஏற்கனவே ” கார்பஸ் ஃபண்ட் ” வங்கி கணக்கை துவக்கி அதன் மூலம் ஆண்டுதோறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்தி வருகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியில் 1964 ஆண்டு படித்த 85 வயதான முன்னாள் மாணவர் கோபிநாத் என்பவர் கலந்து கொண்டு வள்ளல் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் 1960,65- 80-களில் பயின்ற முன்னாள் மாணவர்களும் பலர் ஆர்வமுடன்கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்