Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper கோவை டிச:23
சினிமா துறைக்கும், சுற்றுலா துறைக்கும் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான பொள்ளாச்சியில், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் “பொள்ளாச்சி திருவிழா” துவக்கம் நடைபெற்றது.
இந்த விழாவானது டிசம்பர் 21 முதல் 29 ம் தேதி வரை ரேக்ளா பந்தயம், கபடி மற்றும் பல்லாங்குழி போட்டிகள், புகைப்பட கண்காட்சிகள், மகளிர் காண ஸ்கூட்டர் பேரணி, புத்தகத் திருவிழா, இன்னிசை நிகழ்ச்சிகள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், குதிரை பந்தயம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்ற 50 கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
விழாவிற்கான துவக்க விழா பொள்ளாச்சி கே.கே. ஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவினை மின்சாரம், மதுவிலக்கு,ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா அவர்கள், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிருஸ்டி சிங் ஆகியோர் தலைமை வகித்தனர்.பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வர சாமி, கோவை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் செந்தில் அண்ணா, பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், குமரகுரு கல்வி நிறுவன தலைவர் சங்கர் வானவராயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை பொள்ளாச்சி வர்த்தக சபையின் தலைவர் எஸ்.வெங்கடேஷ், செயலாளர் சபரி.எஸ்.கண்ணன், பொருளாளர்.எஸ். சந்திரன், உப தலைவர்கள் லட்சுமணன், பொறியாளர் முத்துச்சாமி, இணைச் செயலாளர்கள் நாக மாணிக்கம், பாலாஜி மற்றும் எம்.கே.ஜி ஆனந்தகுமார், வர்த்தக சபை பொறுப்பாளர் ராஜா ஆகியோர் நிகழ்ச்சியினை ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் பொள்ளாச்சி நகர வியாபாரிகள் பொதுமக்கள் திரளாக விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், pulvinar dapibus leo.