நாகர்கோவில் அக் 25
தற்போது சமூகத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் நேரத்தை ஆராய்ந்து பார்க்கின்ற போது குறிப்பாக மதிய வேளையில் இந்த குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது, மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை அதிக அளவில் குற்றங்கள் நடந்திருப்பது தெரிய வருகிறது, குற்றங்கள் எந்த நேரத்தில் நடந்தாலும் அதை தடுக்க முன்னெச்சரிக்கையாக காவல் துறையினர் பணியாற்ற வேண்டும், ஆனால் தற்போது குற்ற சம்பவங்கள் மதியம் 1 முதல் 5 மணி வரை உள்ள வேளையில் நடைபெறுகிறது என்ற குறிப்பு தெரிய வந்துள்ளதால் போலீசார் இந்த நேரத்தில் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் பொதுமக்களின் உடைமைகளை பாதுகாக்க போலீசார் அனைவரும் சுழன்று பணியாற்ற வேண்டுமென குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து போலீசாரையும் வலியுறுத்தியுள்ளார்.