சுசீந்திரம் மார்ச் 8
சுசீந்திரம் அருகே தேரூரில் எஸ். எஸ். என். கேஸ் குடோன் உள்ளது. சம்பவத்தன்று அந்த கேஸ் குடோனின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 14 கிலோ எடை கொண்ட 22 புல் கேஸ் சிலிண்டர்களையும், மற்றும் 10 கிலோ எடைகொண்ட ஒரு புல் கேஸ் சிலிண்டரையும் ஏதோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து எஸ். எஸ். என். கேஸ் ஏஜென்சியின் மேலாளர் கிருஷ்ணபிள்ளை வயது 46, சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து கேஸ் சிலிண்டர்களை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.